ஸ்ரீநகர்: அமர்நாத் யாத்திரையின் போது, 15 நாட்களில் மூன்று லட்சம் பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவில் பக்தர்கள் தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பனிலிங்கத்தை தரிசிக்க பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் அமர்நாத்திற்கு வருகிறார்கள்.
இந்த ஆண்டுக்கான யாத்திரை ஜூன் 28ம் தேதி தொடங்கியது.இந்த ஆண்டு யாத்திரை ஆகஸ்ட் 19ம் தேதி நிறைவடைகிறது. யாத்திரையை முன்னிட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. யாத்திரை தொடங்கியதில் இருந்து நேற்று (ஜூலை 13) வரை 3 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். யாத்திரைக்கு இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் உள்ளதால், கடந்த காலத்தை விட அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்வர். கடந்த கால வரலாற்றை முறியடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு தரிசன விவரம்:
2001 – 1.91 லட்சம் பக்தர்கள்,
2002 – 1.10 லட்சம் பக்தர்கள்,
2003 – 1.70 லட்சம் பக்தர்கள்,
2004 – 4 லட்சம் பக்தர்கள்,
2005 – 3.88 லட்சம் பக்தர்கள்,
2006- 3.47 லட்சம் பக்தர்கள்,
2007- 2.96 லட்சம் பக்தர்கள்,
2008- 5.33 லட்சம் பக்தர்கள்
2009- 3.81 லட்சம் பக்தர்கள்,
2010- 4.55 லட்சம் பக்தர்கள்
2011- 6.21 லட்சம் பக்தர்கள்,
2012- 6.35 லட்சம் பக்தர்கள்,
2013 – 3.54 லட்சம் பக்தர்கள்,
2014- 3.72 லட்சம் பக்தர்கள்,
2015-ம் ஆண்டு 3.52 லட்சம் பக்தர்கள்,
2016-ம் ஆண்டு 2.21 லட்சம் பக்தர்கள்,
2017- 2.60 லட்சம் பக்தர்கள்,
2018-ம் ஆண்டு 2.85 லட்சம் பக்தர்கள்,
ஆண்டு 2019- 3.43 லட்சம் பக்தர்கள்,
கோவிட் தொற்று காரணமாக அமர்நாத் யாத்திரை 2020 மற்றும் 2021 இல் நடைபெறவில்லை.
ஆண்டு 2022- 3.04 லட்சம் பக்தர்கள்,
ஆண்டு 2023- 4.50 லட்சம் பக்தர்கள்.