சண்டிகர்: ஹரியானா சட்டசபை தேர்தல் வாக்குறுதிகளை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது. இலவச மின்சாரம், இலவச கல்வி, இலவச மருத்துவம் போன்றவை.
ஹரியானாவில் முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது. மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பாஜகவும், காங்கிரஸும் பணியைத் தொடங்கியுள்ளன. லோக்சபா தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணியில் இருந்த ஆம் ஆத்மி கட்சி, ஹரியானா தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவை.
இந்நிலையில், இன்று (ஜூலை 20) ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால், அரியானா மாநிலம் பஞ்ச்குலா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் 5 தேர்தல் வாக்குறுதிகளை அளித்தார்.
1. மாநிலம் முழுவதும் 24 மணி நேர இலவச மின்சாரம் வழங்கப்படும்.
2. அனைவருக்கும் இலவச நல்ல மருத்துவ சிகிச்சை.
3. அரசுப் பள்ளிகளில் இலவசக் கல்வி வழங்கப்படும்.
4. பெண்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும்.
5. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.