பெங்களூரு: மாநில அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பள கமிஷன் அமல்படுத்தப்படும் என முதல்வர் சித்தராமையா நேற்று அறிவித்தார். இதனால், அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம், 27,000 ரூபாய்; சம்பளம் அதிகபட்சமாக ரூ.2.41 லட்சமாக உயரும். மேலும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் புதிய சம்பளம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடகா மாநில அரசு ஊழியர்கள் 7வது ஊதியக்குழுவின்படி சம்பளம் வழங்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த ஆட்சியின் போதும் போராட்டங்களை நடத்தினர்.
பசவராஜ் பொம்மை முதல்வராக இருந்தபோது, 7வது ஊதியக்குழுவின்படி சம்பளம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அப்போது, அடிப்படை சம்பளத்தை விட, 27.50 சதவீதம் சம்பளத்தை உயர்த்தி வழங்கலாம் என, 7வது சம்பள கமிஷன், அரசுக்கு பரிந்துரை செய்தது. அப்போது சம்பளம் 17 சதவீதம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், சட்டசபை தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், அது நீக்கப்படவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் நடந்த கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில், 27.50 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், சட்டசபையில் முதல்வர் சித்தராமையா நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அடிப்படை ஊதியத்தை ஜூலை 1, 2022 முதல் 27.50 சதவீதம் உயர்த்த ஏழாவது ஊதியக் குழு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
பரிந்துரையின்படி, 2024 ஜூலை 15 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சம்பளத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. எனவே ஜூலை 1, 2022 முதல், அடிப்படை ஊதியத்தில் 27.50 சதவீதம்; 31 சதவீத தள்ளுபடி விலையும் அதிகரிக்கப்படும்.
இதன்படி, தற்போதைய குறைந்தபட்ச சம்பளமான 17,000 ரூபாய் 27,000 ரூபாயாக அதிகரிக்கப்படவுள்ளது; அதிகபட்ச சம்பளம் ரூ.1,50,600 மற்றும் ரூ.2,41,200 ஆக உயரும். இது இந்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது. ஆகஸ்ட் 1ம் தேதி புதிய சம்பளம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
மேலும், ஓய்வூதியம் ரூ.75,300ல் இருந்து ரூ.1,20,600 ஆக உயரும். இந்த சம்பள உயர்வு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்களுக்கு பொருந்தும். சம்பள உயர்வால் மாநில அரசுக்கு ஆண்டுக்கு 20,208 கோடி ரூபாய். இதற்கான நிதி 2024-25 பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.