பிரயாக்ராஜ்: உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நேற்று மகா கும்பமேளா விழா கோலாகலமாக தொடங்கியது. முதல் நாளிலேயே, லட்சக்கணக்கான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். இந்த சூழ்நிலையில், பிரயாக்ராஜுக்கு வரும் பக்தர்களுக்கு உதவும் வகையில் உத்தரபிரதேச அரசு மிதக்கும் காவல் நிலையத்தை அமைத்துள்ளது.
படகில் அமைக்கப்பட்டுள்ள காவல் நிலையம், மகா கும்பமேளாவின் 45 நாட்கள் முழுவதும் பக்தர்களுக்கு உதவும். காவல்துறையினர் அவர்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவார்கள். இந்த சூழ்நிலையில், அங்கு வந்துள்ள பக்தர்கள், மிதக்கும் காவல் நிலையம் பல பக்தர்களுக்கு மிகவும் உதவியாக இருப்பதாகக் கூறியுள்ளனர்.
கும்பமேளாவிற்கு வரும் பக்தர் விஜய் குமார் கூறுகையில், “கும்பமேளாவிற்கு வரும் பக்தர்களுக்கு நிறைய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஏற்பாடுகள் சிறப்பாக உள்ளன. உணவு, தங்குமிடம் மற்றும் சாலை வசதிகள் சிறப்பாக உள்ளன. பக்தர்கள் தங்குவதற்கு கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பது ஒரு சிறந்த ஏற்பாடாகும். ”