பாட்னா: கணவன் மனைவியை காதலித்து திருமணம் செய்த சம்பவம் பீகார் மாநிலம் லக்கிசராய் பகுதியில் நடந்துள்ளது. பீகார் மாநிலம் லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள ராம்நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் குமார் (26). இவரது மனைவி குஷ்பு குமாரி (22). 2021 இல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், குஷ்புகுமாரி அதே ஊரை சேர்ந்த சந்தன்குமார் (24) என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். ஆனால் அதற்கு முன்பே குஷ்புவின் பெற்றோர் தங்கள் மகளுக்கு ராஜேஷ் குமாருக்கு திருமணம் செய்து வைத்தனர். பழைய காதலை மறக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார் குஷ்பு குமாரி. ராஜேஷ் இல்லாத ஒரு நாள் இரவு, சந்தன் குமார் குஷ்புவின் வீட்டிற்குச் செல்கிறார். அப்போது ராஜேஷ்குமாரின் சகோதரர்கள் குஷ்புவையும், சந்தன்குமாரையும் கையும் களவுமாக பிடித்தனர்.
இதையடுத்து, மறுநாள் காலை குஷ்புவையும், சந்தன்குமாரையும் பஞ்சாயத்து முன்பு அழைத்து வந்தனர். அப்போது அங்கு வந்த அவரது கணவர் ராஜேஷ்குமார், தனது மனைவியை காதலர் சாந்தனுக்கே திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளதாக கூறினார். பின்னர் இருவரது சம்மதத்துடன் அங்குள்ள கோவிலில் திருமணம் நடந்தது. இதையடுத்து ராஜேஷ் குழந்தையை தன்னுடன் வைத்துக் கொண்டு மனைவியை காதலனுடன் மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்துள்ளார். ராஜேஷ் கூறுகையில், “இவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கட்டும். அவர்கள் எங்கிருந்தாலும் நலமாக இருக்கட்டும். நான் என் மகனுடன் வாழ்வேன்.”
குஷ்பு குமாரி கூறும்போது, “என்னை காதலருடன் பார்த்ததும் என் கணவர் இந்த திருமணத்துக்கு சம்மதித்தார். அவருக்கு என் நன்றிகள். இனி, நான் என் புதிய கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்வேன்.