இந்தியாவின் முதல் 24 மணி நேர ஆன்லைன் நீதிமன்றம் கேரளாவின் கொல்லத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
புதிய முயற்சியின் மூலம் வழக்கறிஞர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே வழக்குகளை கண்காணிக்கவும், சம்மன்களின் நிலையை சரிபார்க்கவும் மற்றும் மனுக்களை தாக்கல் செய்யவும் அனுமதிக்கும். வழக்கறிஞர்கள் வழக்குகளில் ஆஜராகி, வீடியோ கான்பரன்சிங் மூலம் தங்கள் வாதங்களை முன்வைக்க முடியும்.
ஆன்லைன் நீதிமன்றம் முதலில் காசோலை பவுன்ஸ் வழக்குகள் தொடர்பான சேவைகளை வழங்கும். புதிய முயற்சி நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவில் தீர்க்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.