திருமலை: திருப்பதி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா வேத பல்கலைக்கழகம், ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக வளாகத்தில் அவ்வப்போது சுற்றித் திரிந்து அங்குள்ள தெருநாய்களை வேட்டையாடி வருகிறது. இதனால் சிறுத்தை நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் வனத்துறை அதிகாரிகள் பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கூண்டு வைத்து உள்ளனர்.

இந்நிலையில், நேற்று காலை வேத பல்கலைக்கழகம் அருகே உள்ள கூண்டில் சிறுத்தைப்புலி சிக்கியது. இதுபற்றி தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுத்தையை கூண்டுடன் மீட்டு திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவிற்கு கொண்டு சென்றனர்.
தொடர் கண்காணிப்புக்கு பின் அடர்ந்த வனப்பகுதியில் விடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களாக சிறுத்தை நடமாட்டம் காரணமாக வனத்துறையினர் இரவு 7 மணிக்கு மேல் மாணவர்கள், பேராசிரியர்கள், விடுதி வாசிகள் வெளியே வரவேண்டாம் என எச்சரித்தனர். இந்நிலையில் சிறுத்தைப்புலி கூண்டில் சிக்கியதால் அனைவரும் நிம்மதி அடைந்தனர்.