புதுடெல்லி: வடக்கு அந்தமானை ஒட்டியுள்ள வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி 48 மணி நேரத்தில் புயலாக மாறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 48 மணி நேரத்தில் புயலாக மாறி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அக்டோபர் 24-ம் தேதி மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளது.
ஆனால், இதனால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் வடகிழக்கு பருவமழை காலத்தில் முதலில் உருவாகும் புயல் இதுவாகும்.