சென்னை விமான நிலையத்தில் பபரிசுப் பொருள் கடை மூலம் 270 கிலோ தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
சென்னை சர்வதேச விமானப் பகுதியில் பரிசுக் கடை திறக்க பாஜக தலைவர் பிருத்விக்கு உதவியதாக சபீர் அலி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சபீர் அலியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சென்னையில் உள்ள பாஜக தலைவர் பிருத்வி வீட்டில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் ரூ.167 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் விமான நிலைய அதிகாரிகளுக்கு, அரசியல் புள்ளிகளுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தங்கம் கடத்தல் வழக்கில் கைதான சென்னையைச் சேர்ந்த சபீர் அலிக்கு சில விமான நிலைய அதிகாரிகள் உதவி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பல பெரிய புள்ளிகள் இந்த வழக்கில் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.