ராய்காட்: இது செம இல்ல… கடற்கரையில் மணலில் சிக்கிய ஃபெராரி காரை கயிறு கட்டி மாட்டுவண்டி மூலம் இழுத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலானது. இதை பார்த்து பலரும் இது செம இல்ல என்ற ரீதியில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள ரெவ்தண்டா கடற்கரை மணலில் இத்தாலியின் சொகுசு ஸ்போர்ட்ஸ் கார் ஆன ஃபெராரி சிக்கியுள்ளது. காரை வெளியே எடுக்க எவ்வளவோ முயன்றும் பலன் அளிக்கவில்லை.
இதனையடுத்து ஃபெராரி காரின் முன்பக்கத்தில் கயிறு கட்டி ஒரு மாட்டு வண்டி மூலம் இழுத்து வெளியேற்றியுள்ளனர்.
இதனையடுத்து ராய்காட் காவல்துறை கடற்கரையில் கார்களை ஓட்டுவதற்கு தடை விதித்துள்ளது. மேலும் இந்த தடையை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.