தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) 2014க்கு விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே ஆதார் அட்டை வழங்கப்படும் என அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார். துப்ரி, பர்பெட்டா மற்றும் மோரிகான் மாவட்டங்களில் உள்ள மக்கள் தொகையை விட ஆதார் அட்டைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்றார்.
மூன்று மாவட்டங்களும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகள் என்பதால் இந்த எண்ணிக்கை கேள்விக்குறியாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த மாவட்டங்களில் 103% மற்றும் 101% ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே ஆதார் அட்டை பெறுபவர்கள் வெளிநாட்டினர் என சந்தேகிக்க வாய்ப்பு உள்ளது என முதல்வர் தெரிவித்துள்ளார். எனவே, எதிர்காலத்தில் ஆதார் அட்டை வழங்குவதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை வெளியிட மாநில அரசு முடிவு செய்துள்ளது.
2015 ஆம் ஆண்டு விண்ணப்பிக்கும் போது என்ஆர்சி விண்ணப்ப எண்ணை வழங்குவது கட்டாயமாகும் என்றும், இல்லையெனில் அந்த நபர் அசாமில் இல்லை என்று கருதப்படுவார் என்றும் அவர் கூறினார். அக்டோபர் 1ம் தேதி முதல் அசாமில் ஆதார் அட்டை பெறுவது கடினமாகும்.இவ்வாறு அவர் கூறினார்.
மார்ச் மற்றும் ஆகஸ்ட் 2015 க்கு இடையில் 3,30,27,661 பேர் NRC க்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனால் ஆகஸ்ட் 2019 இல் வெளியிடப்பட்ட இறுதி NRC இல், 19 லட்சம் பேர் விலக்கப்பட்டுள்ளனர். இதுவரை அந்த என்ஆர்சி அறிவிக்கப்படவில்லை.