புதுடெல்லி: மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் நீதிமன்றக் காவலில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்நிலை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி நேற்று தெரிவித்தது.
இது குறித்து டெல்லி மாநில அமைச்சர் ஆதிஷி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடுமையான நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் கெஜ்ரிவாலின் சர்க்கரை அளவு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. கெஜ்ரிவாலுக்கு எதிராக போலி வழக்கில் சதி செய்து சிறையில் அடைத்துள்ளது பாஜக. அவரது உடல்நிலை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. அவரது எடை 8.5 கிலோ குறைந்துள்ளது. சோதனையின் போது அவரது இரத்த சர்க்கரை ஐந்து முறை 50 க்கு கீழே குறைந்தது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தான நிலை.
கெஜ்ரிவாலுக்கு பக்கவாதம் ஏற்பட்டாலும், மூளை பாதிப்பு ஏற்பட்டாலும் யார் பொறுப்பு? ஆம் ஆத்மி கட்சி தலைவர் சிறையில் இருப்பதால், அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க முடியவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தை அணுகுவது குறித்து வழக்கறிஞர்கள் மற்றும் மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறோம்.
கெஜ்ரிவாலுக்கு ஏதாவது நேர்ந்தால், நாடு மட்டுமல்ல; கடவுள் கூட மன்னிக்க மாட்டார் என்பதை பாஜக தெரிந்து கொள்ள வேண்டும்.