மும்பை: மும்பையில் காரை மோதி பெண் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர் 3 நாட்களாக காதலி வீட்டிலும் ரிசாட்டிலும் பதுங்கி இருந்தார். இவரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை வோர்லி பகுதியில் தாறுமாறாக பிஎம்டபிள்யூ காரை ஓட்டி 45 வயது மதிக்கத்தக்க பெண் மீது மோதி உயிரிழக்க காரணமாக இருந்த மிஹிர் ஷா என்பவர் 3 நாட்களாக தேடப்பட்ட நிலையில் போலீசார் அவரைக் கைது செய்தனர்.
விரார் பகுதியில் உள்ள ரிசாட்டில் பதுங்கியிருந்த அவர் செல்போனை நண்பர் பயன்படுத்திய போது காவல்துறையினர் அவர் இருக்குமிடத்தை கண்டுபிடித்தனர். கடந்த 7ம் தேதி சிவசேனா கட்சி பிரமுகரின் மகனான மிஹிர் காரை மோதி பைக்கில் சென்ற பெண்ணை தரதரவென காருடன் இழுத்துச் சென்றதால் அந்தப் பெண் உயிரிழந்தார்.