டெல்லி: ராஜ்யசபா தலைவர் ஜகதீப் தன்கர் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம்சாட்டியுள்ளார். 1952-ம் ஆண்டு முதல் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 67ன் கீழ் எந்தத் தீர்மானமும் கொண்டு வரப்படவில்லை. ராஜ்யசபா தலைவரின் செயல்பாடுகள் பதவியின் கண்ணியத்துக்கு எதிரானது.
எதிர்க்கட்சி தலைவர்களை பேச விடாமல், ஆளும் அரசை அடிக்கடி புகழ்ந்து பேசுகிறார் தங்கர். ராஜ்யசபா தலைவர் தன்கர் பள்ளி முதல்வர் போல் செயல்படுகிறார். ராஜ்யசபா தலைவர் ஜகதீப் தன்கர் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுகிறார் என்று கூறினார்.