அமராவதி: ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
ஆந்திராவில் என்டிஆர், கிருஷ்ணா, குண்டூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ஆந்திராவில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தால் கிட்டத்தட்ட 4.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல கிராமங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. இந்நிலையில், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில முதல்வர்களின் பேரிடர் நிவாரண நிதிக்கு தலா ரூ.50 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஆந்திரா, தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த துயரத்தில் இருந்து மக்கள் மீண்டு வர இறைவனை பிரார்த்திக்கிறேன். எடுத்த நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக இரு மாநில அரசுகளுக்கும் தலா ரூ.50 லட்சம் நிதியுதவி அளிக்கிறேன்” என்று தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவீஸ் 25 லட்சம் ஆந்திர முதல்வரின் நிவாரண நிதிக்கு தருவதாக அறிவித்தது.