மும்பை: பிரபல தொலைக்காட்சி நடிகை தீபிகா கக்கர் கடந்த சில வாரங்களாக தனது மேல் வயிற்றில் வலியால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதித்தபோது, அவரது கல்லீரலில் டென்னிஸ் பந்து அளவிலான கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் நடத்தப்பட்ட சோதனைகளில் கட்டி புற்றுநோய் என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த செய்தி அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தீபிகா கக்கர் வெளியிட்ட பதிவில், ‘நான் மிகவும் கடினமான நேரத்தில் இருக்கிறேன். இந்த கடினமான சூழ்நிலையிலும், நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். கல்லீரலில் உருவாகியுள்ள இரண்டாம் நிலை புற்றுநோயை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். இதை நான் முழு நம்பிக்கையுடன் எதிர்கொள்கிறேன். என் குடும்பத்தினர், உங்கள் அன்பு மற்றும் பிரார்த்தனைகள் என்னுடன் உள்ளன,’ என்று அவர் கூறினார்.
இதேபோல், அவரது கணவர் ஷோயப் இப்ராஹிம் முதலில் இந்த நோயைப் பற்றி ஒரு யூடியூப் வீடியோ மூலம் பகிர்ந்து கொண்டார், மேலும் அவரது ரசிகர்களிடம் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொண்டார். புற்றுநோய் கல்லீரலில் உள்ள கட்டிக்கு மட்டுமே என்றும் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடியும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.