டெல்லி: அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் (AGEL) நிறுவனம், 2025 ஜூன் 30ஆம் தேதியன்று 15,539.9 மெகாவாட் மின் உற்பத்தி திறனை எட்டியுள்ளது. இது இந்தியாவில் ஒரு முன்னணி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமாக அதானியின் வலிமையை உறுதிப்படுத்துகிறது.
இந்த மொத்த திறனில், சூரிய மின்சக்தி மூலம் 11,005.5 மெகாவாட், காற்றாலை மின்சக்தி மூலம் 1,977.8 மெகாவாட், மற்றும் கலப்பு திட்டங்களாக 2,556.6 மெகாவாட் உற்பத்தி செய்யப்படுகிறது. இது சுமார் 7.9 மில்லியன் வீடுகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கக்கூடிய அளவாகும்.

நிறுவனத்தின் CEO கன்னா கூறுகையில், “இந்த சாதனை எங்கள் குழுவின் உழைப்பும், தொலைநோக்கு நோக்கும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையும் தான் காரணம். எங்கள் 2030 இலக்கு 50,000 மெகாவாட். அதற்கான பாதையில் நாங்கள் உறுதியாக நகர்ந்து வருகிறோம்” என்றார்.
மேலும், குஜராத்தின் கட்ச் பகுதியில் நிறுவனம் உருவாக்கும் 30,000 மெகாவாட் திறன் கொண்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்கா, உலக அளவில் மிகப் பெரியதாகும். இது 538 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது.
இந்த முயற்சிகள் அனைத்தும் இந்தியாவின் 2030ல் 500 ஜிகாவாட் பசுமை மின் இலக்கை அடைய உறுதுணையாக அமைகின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்பும், நிலையான வளர்ச்சியும் இந்த திட்டங்களின் மூலம் சாதிக்கப்படும்.