உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் வண்ணமயமான மகா கும்பமேளாவில் பக்தர்களுக்கு உதவ அதானி குழுமத்தைச் சேர்ந்த 5,000 ஊழியர்கள் முன்வந்து வருகின்றனர். அதானி குழும அதிகாரிகள் கூறியதாவது:- அதானி விமான நிலையத்தைச் சேர்ந்த 300 ஊழியர்கள், அதிக கூட்டத்தை கையாள பயிற்சி பெற்றவர்கள், பிரயாக்ராஜ் கும்பமேளாவில் தன்னார்வத் தொண்டு செய்து, பக்தர்களுக்கு மகிழ்ச்சியுடன் சேவை செய்து வருகின்றனர்.
மொத்தம், இந்த மகா கும்பமேளாவின் பல்வேறு பணிகளில் அதானி குழுமத்தைச் சேர்ந்த 5,000 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். விமான நிலைய ஊழியர்களுக்கு ஏற்கனவே வாடிக்கையாளர் சேவை, சரக்கு போக்குவரத்து, கூட்டத்தை கையாளுதல் போன்ற பணிகளில் அனுபவம் உள்ளதால், பக்தர்களுக்கு சுமூகமான முறையில் சேவைகளை வழங்கி வருகின்றனர்.

குறிப்பாக மகா கும்பமேளாவின் போது, பக்தர்களை முக்கிய இடங்களுக்கு அழைத்துச் செல்வது, நெரிசலான பகுதிகளில் சுகாதாரத்தை பேணுவது என பல்வேறு பணிகளில் உதவி வருகின்றனர். சமுதாயத்திற்கு சேவை செய்வதற்கான வாய்ப்பாக கருதி முழு ஈடுபாட்டுடன் இந்த பணியை முழு மனதுடன் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.