அகமதாபாத்: அதானி டோட்டல் கேஸ், பச்சை ஹைட்ரஜனை இயற்கை எரிவாயுவுடன் கலக்கும் மிகப்பெரிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
முதல் கட்டத்தில், குஜராத்தின் அகமதாபாத்தில் குடியிருப்பு மற்றும் வணிக பயன்பாட்டிற்காக குழாய்கள் மூலம் வழங்கப்படும் சமையல் எரிவாயுவில் 2.2-2.3 சதவீதம் பச்சை ஹைட்ரஜன் கலக்கப்படுகிறது.
படிப்படியாக 8 சதவீதமாக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பச்சை ஹைட்ரஜன் கலவையானது இயற்கை எரிவாயுவின் செயல்திறனை அதிகரிக்கும் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கும் என்று கூறப்படுகிறது.
பருவநிலை மாற்றத்தால் கரியமில வாயு வெளியேற்றத்தை பூஜ்ஜியமாக குறைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக அதானி நிறுவனம் பசுமை ஹைட்ரஜன் கலப்பின திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதானி டோட்டல் கேஸ் நிறுவனம் கூறும்போது, “பச்சை ஹைட்ரஜனை இயற்கை எரிவாயுவுடன் கலப்பதன் மூலம் கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கலாம். தூய்மையான எரிபொருள் உள்கட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் அதானி குழுமத்தின் முக்கிய நடவடிக்கை இதுவாகும்,” என்று தெரிவித்துள்ளது.