
புதுடெல்லி: டெல்லியில் 2017-ம் ஆண்டு அரசு பஸ்களில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பிற்காக 10,000 காவலர்கள் (பஸ் மார்ஷல்கள்) நியமிக்கப்பட்டனர். 2023 அக்டோபரில் அவர்கள் வேலை இழந்தனர். இதற்கு பாஜகவின் சதியே காரணம் என்று அப்போதைய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்தார்.

இந்நிலையில், ஓராண்டுக்குப் பிறகு 10,000 பேருந்து காவலர்களை மீண்டும் பணியமர்த்த டெல்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இது லெப்டினன்ட் கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில், டெல்லி லெப்டினன்ட் கவர்னர் வி.கே.சக்சேனாக்கு முதல்வர் ஆதிஷி எழுதிய கடிதத்தில், இதுகுறித்து நேற்று கூறுகையில், “பஸ் காவலர்கள் மறு நியமனம் தொடர்பான கோப்பு அனுப்பப்பட்டு 2 வாரங்களுக்கு மேலாகியும், இதுவரை ஒப்புதல் பெறவில்லை. இந்த திட்டத்திற்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்” என்றார்.