புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ள நிலையில், டெல்லியின் அடுத்த முதல்வராக அதிஷியின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.
இதற்கு அனைத்து எம்எல்ஏக்களும் ஒப்புதல் அளித்துள்ளனர். மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி திகார் சிறையில் இருந்த கெஜ்ரிவால் கடந்த 13-ம் தேதி ஜாமீனில் வெளிவந்தார்.
ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 15) ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், “இன்னும் 2 நாட்களில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வேன்.
மக்கள் மீண்டும் எனக்கு வாக்களித்த பிறகு மீண்டும் பதவியில் அமர்வேன்” என்று கூறினார். என்றார். இதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) கெஜ்ரிவால் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார்.
இதற்காக மாலை 4.30 மணிக்கு டெல்லி லெப்டினன்ட் கவர்னர் வினய் சக்சேனாவை சந்தித்து ராஜினாமா கடிதம் அளிக்க உள்ளார். இதற்கிடையில், அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் கெஜ்ரிவாலின் இல்லத்தில் சந்தித்து டெல்லி அரசை அடுத்து யார் தலைமை தாங்குவது என்பது குறித்து ஆலோசித்தனர்.
அதன்பின், கட்சியின் அரசியல் விவகாரக் குழு கூடி விவாதித்தது. முன்னதாக, “அரவிந்த் கெஜ்ரிவாலைப் போல நானும் மக்கள் மன்றத்திற்கு செல்கிறேன். தேர்தலில் எனது நேர்மையை மக்கள் அங்கீகரிக்கும் பட்சத்தில் மீண்டும் அமருவேன்” என மனிஷ் சிசோடியா கூறியிருந்தார்.
இதற்கிடையில், எம்எல்ஏக்களுடன் நடந்து வரும் கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் அடுத்த முதல்வராக அமைச்சர் ஆதிஷியின் பெயரை முன்மொழிந்துள்ளார். இதற்கு அனைத்து எம்எல்ஏக்களும் சம்மதம் தெரிவித்தனர்.
இதையடுத்து ஆம் ஆத்மி கட்சியின் சட்டப் பேரவைத் தலைவராக ஆதிஷி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அடுத்த முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் முன்மொழிந்த அமைச்சர், அதிஷி டெல்லி அரசாங்கத்தின் கேபினட் அமைச்சராக உள்ளார். கல்வி, பொதுப்பணித்துறை, மின்துறை உள்ளிட்ட பல முக்கிய இலாகாக்களை வகித்துள்ளார். டெல்லியில் உள்ள கல்காஜி தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆதிஷி, 2013-ம் ஆண்டு முதல் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து வருகிறார்.