கேரளா: போதைப்பொருள் பயன்படுத்துவோருக்கு எய்ட்ஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் கேரளாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் போதைப்பொருள் பயன்படுத்தும் 10 பேருக்கு எய்ட்ஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஹெச்ஐவி தொற்றுக்கு அதிக வாய்ப்புள்ள பாலியல் தொழிலாளிகள், போதைப்பொருள் பயன்படுத்துவோரிடம் மலப்புரம் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம் நடத்திய வழக்கமான பரிசோதனையில் இது கண்டறியப்பட்டுள்ளது.
போதைப்பொருள் பயன்படுத்தும் குழுவைச் சேர்ந்தவர்கள் ஒரே ஊசியைப் பயன்படுத்தியதே தொற்று பரவக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. இத்தகவல் கேரளா மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.