சென்னையில் கேரள எம்பிக்கள் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. திருவனந்தபுரம்-டில்லி பறக்கும் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் கடுமையான காற்றழுத்தம் ஏற்பட்டது.

இதனால், விமானி அவசரமாக சென்னையில் தரையிறக்க திட்டமிட்டார். ஆனால், தரையிறக்க முயன்ற போது அதே ஓடுபாதையில் வேறு விமானம் இருப்பதால், விமானி விமானத்தை மீண்டும் மேலே எழுப்பினார்.
பின்னர் இரண்டாவது முறையாக விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவம் விமானத்தில் இருந்த எம்பிகள் மற்றும் பயணிகளுக்கு பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது. காங்கிரஸ் எம்பி கேசி வேணுகோபால், விமானியின் தைரியமான முடிவு பல உயிர்களை காப்பாற்றியது என்று தெரிவித்தார். இந்த நிகழ்வு சென்னையில் பெரும் விபத்து தவிர்ப்பாக முடிந்தது.