லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் இயங்கி வருவது இரட்டை இயந்திரம் அல்ல, இரட்டைத் தவறு அரசு என்று பாஜகவை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள திவா ரயில் நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறால் சிஎஸ்எம்டி-மட்கான் வந்தே பாரத் ரயில் நேற்று முன் தினம் வழக்கமான வழித்தடத்தில் இருந்து விலகி கோவா செல்லும் தண்டவாளத்தில் சென்றது.

இதனால், சுமார் 90 நிமிடம் தாமதமானது. இந்நிலையில், இதை விமர்சித்துள்ள சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், வந்தே பாரத் வழி தவறிவிட்டதா? கோவா செல்ல வேண்டிய ரயில் கல்யாணில் முடிந்தது. பாஜக இரட்டை எஞ்சின் அரசு அல்ல, இரட்டை தவறு அரசு. தவறான பாதையில் நாட்டின் இயந்திரத்தை பாஜக சிதைத்து விட்டது.