மத சுதந்திரம் தொடர்பாக இந்தியாவுக்கு எதிராக அமெரிக்க அரசு அமைப்பு அளித்துள்ள புகார் தீங்கிழைக்கும் செயல் என மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது. இந்தியாவில் மத சுதந்திரம் சீர்குலைந்து வருவதாக அமெரிக்க அரசால் நியமிக்கப்பட்ட சர்வதேச மத சுதந்திர ஆணையம் (USCIRF) கூறியுள்ளது.
மேலும் இந்தியாவை பரிசீலனைக்கு உள்ள நாடுகளின் பட்டியலில் சேர்க்க இந்தியா பரிந்துரைக்க திட்டமிட்டுள்ளது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, இந்த அமைப்பின் உறுப்பினர்களுக்கு இந்தியா விசா மறுத்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவுத்துறை செயலாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘‘மத சுதந்திரம் தொடர்பாக இந்தியா மீது அமெரிக்க அரசு கூறியுள்ள புகார் விஷமானது.
மேலும் அவர் கூறுகையில், ‘‘அரசியல் உள்நோக்கத்துடன் இந்தியா மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் அமைப்பு. இந்தியாவுக்கு எதிரான இந்த அறிக்கைகள் பொய்யான தகவல்களுடன் வெளியிடப்படுகின்றன.
அதை நாங்கள் முற்றிலும் நிராகரிக்கிறோம் என்றார். இந்தியாவை குற்றம் சாட்டி நேரத்தை வீணடிக்காமல், நாட்டில் நிலவும் மனித உரிமை பிரச்னைகளுக்கு தீர்வு காண அமெரிக்க அமைப்பு முயற்சிக்க வேண்டும் என்றார்.