ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள குகைக் கோயிலான அமர்நாத்திற்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து 12,756 அடி உயரத்தில் பனியால் ஆன சிவலிங்கத்தை தரிசிக்கின்றனர்.
இந்த ஆண்டு யாத்திரை தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹா தலைமையில் அமர்நாத் கோயில் வாரியக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை ஜூலை 3 ஆம் தேதி தொடங்கும் என்று ஆளுநர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் மற்றும் காண்டர்பால் மாவட்டத்தில் உள்ள பால்டலில் இருந்து யாத்திரை தொடங்கும். 39 நாள் யாத்திரை ஆகஸ்ட் 9 ஆம் தேதி ரக்ஷா பந்தன் தினத்தன்று முடிவடையும் என்று அவர் கூறினார்.