புதுடெல்லி: சீனாவின் தியான்ஜினில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினையும் சீனப் பிரதமர் ஜி ஜின்பிங்கையும் கட்டிப்பிடித்து கைகுலுக்கியபோது, இந்திய-அமெரிக்க உறவுகள் தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:- “21-ம் நூற்றாண்டில் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு உறவு இன்னும் வலுவடையும். அது நம்மை முன்னோக்கி நகர்த்துவதற்கான ஆற்றலை நாங்கள் காண்கிறோம்.

நமது இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான நீடித்த நட்பு இந்த பயணத்தின் உந்து சக்தியாகும். புதுமை, பாதுகாப்பு, தொழில்முனைவு மற்றும் பலவற்றில் எங்கள் உறவு ஒன்றுபட்டுள்ளது,” என்று மார்கோ ரூபியோ கூறினார்.
எஸ்சிஓ உச்சிமாநாட்டில் புதினையும் ஜி ஜின்பிங்கையும் சந்திப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்த கருத்துக்கள், இந்தியா-அமெரிக்க உறவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன.