புதுடில்லி; டில்லி சட்டசபை தேர்தல் பிப்.5ம் தேதி நடைபெறுகிறது. 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டு முடிவுகள் பிப்.8ம் தேதி வெளியிடப்படும். ஆம் ஆத்மி, பா.ஜ., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில், தனியார் ஊடகம் ஒன்றுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பேட்டி அளித்துள்ளார். பேட்டியில் அவர் கூறியதாவது: “பொய் சொல்வது என்பது நீண்ட நாட்கள் நிலைக்காது. 10 ஆண்டுகளில் தற்போது இருக்கும் ஆட்சியின் அனைத்து பொய்களும் அம்பலமாகிவிட்டன. கிராமங்கள், நகரங்கள், முக்கிய பகுதிகள் அனைத்தும் வளர்ச்சியை இழந்துள்ளன.”
மேலும், டில்லியில் இந்த முறையும் பா.ஜ., ஆட்சி அமைக்கும் என்றும், கெஜ்ரிவால், அதிஷி இருவரும் தோல்வியை சந்திக்கப்போகின்றனர் என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.