சென்னை: உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்கள் மீட்கப்பட்டதையடுத்து, அவர்களை டெல்லிக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 30 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு தர்கலாவில் தங்க வைக்கப்பட்டனர்.
நிலச்சரிவில் சிக்கிய 30 பேரை மீட்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதையடுத்து உடனடி நடவடிக்கை.
தமிழக அரசின் துரித நடவடிக்கையால் மீட்கப்பட்ட 30 பேரும் ஓரிரு நாளில் விமானம் மூலம் தமிழகம் திரும்புவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.