புதுடில்லி: இந்தியா-வங்கதேச எல்லையில் சட்டவிரோதமாக தங்க பிஸ்கட்டுகளை கடத்த முயன்ற நபரை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். தகவல் கிடைக்கும்போது, எல்லை பாதுகாப்பு படையின் தெற்கு மேற்கு வங்கம் பிரிவு, 32வது பட்டாலியன் வீரர்களை தீவிர கண்காணிப்பில் வைத்தது.

அடர்ந்த மூங்கில் வனப்பகுதியில் சந்தேகத்திற்குரிய நடமாட்டம் கண்டதும் அந்த நபரை உடனடியாக பிடித்து, பிளாஸ்டிக் பையில் 20 தங்க பிஸ்கட்டுகள் இருப்பதை கண்டறிந்தனர். இதன் மதிப்பு ரூ.2.82 கோடியாகும். கைது செய்யப்பட்டவர் மேற்கு வங்கத்தின் முஸ்லீம்பாரா கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் வங்கதேசம் ஹொராண்டிபூர் பகுதி வழியாக தங்கத்தை கடத்த திட்டமிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.