புதுடில்லி: ஜனதா கி அதாலத் நிகழ்ச்சியில் திரண்டிருந்த மக்களிடம் கெஜ்ரிவால் கூறியதாவது:-
பா.ஜ.,வின் இரட்டை இயந்திர அரசு, நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் தோல்வியை சந்தித்துள்ளது. எனவே, அவர்கள் ஹரியானா மற்றும் ஜம்மு-காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டிய நேரம் வந்துவிட்டது.
இரு தரப்பையும் கொள்ளையடிக்கவும், இரு தரப்பையும் ஊழல் செய்யவும் மட்டுமே பாஜகவின் இரட்டை எஞ்சின் மாடல் அரசு உதவுகிறது. நான் பிரதமர் மோடிக்கு நேரடியாக சவால் விடுகிறேன்.
டில்லி சட்டசபை தேர்தல் நடக்கும் பிப்ரவரிக்குள் உங்கள் ஆட்சியில் உள்ள 22 மாநிலங்களில் இலவச மின்சாரம் அறிவிக்கப்பட்டால், பா.ஜ., மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய தயாராக உள்ளேன்.
இதைச் செய்ய அவர்கள் தயாரா? ஹரியானாவில் இரட்டை எஞ்சின் அரசாங்கம் வீழ்ச்சியடையும் நேரம் வந்துவிட்டது. அதேபோல் ஜம்மு காஷ்மீரிலும் பாஜகவின் செல்வாக்கு முடிவுக்கு வரும்.
பாஜக எப்போதும் ஏழைகளுக்கு எதிரான அரசாகவே இருந்து வருகிறது. பஸ் மார்ஷல்கள் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் நீக்கப்பட்டதே அதற்குச் சான்று. அதேபோல் டெல்லியில் ஊர்க்காவல் படையினரின் சம்பளம் நிறுத்தப்பட்டதும் பாஜகவின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது.
லெப்டினன்ட் கவர்னரின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி அரசில் ஜனநாயகம் இல்லை. இவ்வாறு கெஜ்ரிவால் பேசினார்.