பெங்களூரு: பெலகாவியில் உள்ள சவுதாத்தி யல்லம்மா மலையில் உள்ள விருந்தினர் மாளிகையை முதல்வர் சித்தராமையா திறந்து வைத்து பேசுகையில், சுற்றுலாப் பயணிகளுக்காக ரூ.22.45 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அறைகள், தங்குமிடம், வாகன நிறுத்தம், தோட்டம் மற்றும் இதர உள்கட்டமைப்பு வசதிகள், மகளிர் மேம்பாட்டுக் கழகம் ரூ.10 கோடி செலவில் கட்டப்பட்ட கடைகள் விருந்தினர் மாளிகைமாளிகையை திறந்து வைத்து பேசிய சித்தராமையா, இந்துக்கள், இந்துத்துவா என்ற பெயரில் மக்களை பிரிக்கும் வேலையை பாஜக செய்கிறது.
இந்த நாடு சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும். மாநிலத்தில் இன்னும் 3 ஆண்டுகள் எங்கள் ஆட்சி நீடிக்கும்.
யல்லம்மா தொகுதியை சிறந்த முறையில் அபிவிருத்தி செய்வதாக உறுதியளித்தார். மூடா ஊழல் வழக்கில் விசாரணையை எதிர்கொள்ளும் முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும் என பாஜக வலியுறுத்தி வரும் நிலையில், மக்கள் ஆசி இருக்கும் வரை அவரை யாராலும் அசைக்க முடியாது என சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்த விழாவில் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், அமைச்சர்கள் எச்.கே.பாட்டீல், ராமலிங்கரெட்டி, சதீஷ் ஜார்கிஹோலி, லட்சுமி ஹெப்பாள்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.