அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறியதன்படி, தமிழக ஜவுளி துறையில் வேலை பெறும் நோக்கத்துடன் வங்கதேச முஸ்லிம்கள் அதிகளவில் இந்திய எல்லையை ஊடுருவி வருகிறார்கள்.
அசாம் மற்றும் திரிபுரா எல்லைகள் வழியாக தினசரி 20-30 பேர் வரை சட்டவிரோதமாக நுழைய முயல்கிறார்கள். அசாம் அரசு அவர்களை கைது செய்யாமல், அவர்களது சொந்த நாடிற்கு திருப்பி அனுப்பிவைக்கிறது.
வங்கதேசத்தில் காணப்படும் பொருளாதார வீழ்ச்சி மற்றும் கலவர சூழ்நிலை காரணமாக இத்தகைய ஊடுருவல் அதிகரித்துள்ளதாக முதல்வர் தெரிவித்தார். வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள், இவ்வாறான சூழ்நிலையிலும் நாட்டை விட்டு வெளியேறவில்லை என்றுகூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் வடகிழக்கு கவுன்சிலில் விவாதிக்கப்பட்டு, மத்திய அரசு இதை தீவிரமாக கவனித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
வங்கதேசத்தில் சிறுபான்மையினரின் பாதுகாப்புக்காக இந்திய அரசு கடுமையாக உழைத்து வருவதாகவும் முதல்வர் சர்மா தெரிவித்தார்.