கவுகாத்தி: 2041ம் ஆண்டுக்குள் அசாமில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருப்பார்கள் என அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ் கூறியுள்ளார். அவர் கூறியதாவது: மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்துக்களின் மக்கள் தொகை 16 சதவீதம் மட்டுமே அதிகரித்து வருகிறது.
அதே சமயம் முஸ்லிம் மக்கள் தொகை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை 30 சதவீதம் அதிகரித்து வருகிறது. 2041ல் பெரும்பான்மையாக மாறுவார்கள்.இந்த அதிகரிப்பை கட்டுப்படுத்த தனது தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.
மேலும் அவர் கூறுகையில், தற்போதைய புள்ளி விவரப்படி அசாமின் மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் முஸ்லிம்களாக மாறிவிட்டனர். 2041ல் அஸ்ஸாம் முஸ்லிம்கள் பெரும்பான்மை மாநிலமாக மாறும்.இதை யாராலும் தடுக்க முடியாது என்றார்.