முன்னாள் என்சிபி அமைச்சர் பாபா சித்திக் மும்பையில் சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில் அடையாளம் தெரியாத மூன்று நபர்களால் மூன்று முறை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றார். பாபா சித்தியை உடனடியாக அருகில் உள்ள லீலாவதி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பாபா சித்திக் கொலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் மற்றும் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பாபா சித்திக் கொலைக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து X தளத்தில் அவர் கூறுகையில், “பாபா சித்திக் படுகொலை மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்திற்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம். மகாராஷ்டிராவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை இந்த கொடூர சம்பவம் காட்டுகிறது. இதற்கு மகாராஷ்டிரா அரசு பொறுப்பேற்க வேண்டும்.”
பாபா சித்திக் மீதான தாக்குதலில் தொடர்புடைய 3 பேரில் உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். மூன்றாவது நபரை தேடும் பணி நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.