டில்லி சட்டசபை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜகவிற்கு சாதகமாக உள்ளது. ஆம் ஆத்மி கட்சி இந்த முடிவுகளை நம்ப மறுக்கிறது. அவர்கள், 4வது முறையாக கெஜ்ரிவால் மீண்டும் முதல்வராக வருவார் என உறுதியாக கூறுகின்றனர்.
அதே நேரத்தில், சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. சிலர் இந்த முடிவுகளை தேர்தல் ஆணையம், காவல்துறை, மத்திய அரசின் தனியுரிமை நிறுவனங்கள், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் தலையீடாக பார்க்கின்றனர்.
ஒரு கருத்து பதிவில், “காங்கிரசுடன் கூட்டணி இல்லாமல் ஆம் ஆத்மி தனியாகப் போட்டியிட்டதால்தான் இவ்வாறு முடிவடைந்தது. தீமுகவும் இதே நிலை அடையும்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.
மற்றொரு கருத்தில், “கெஜ்ரிவால் தனது கட்சியை உருவாக்கி வளர்த்ததற்காக தான் தற்போது பெரும் சவால்களை எதிர்கொள்கிறார்” என பதிவிட்டுள்ளார்
தாமரையே வளர்க்க வேண்டும், அது மட்டுமே டில்லிக்கு வளம் தரும் என்று சிலர் பாஜகவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.மற்றொரு கருத்து, “தலைநகரில் நடந்த மாற்றம் தமிழகத்திலும் விரைவில் நிகழும். திருப்பரங்குன்றம் போன்ற சம்பவங்கள் மக்களை விழிப்புணர்வு ஏற்படுத்தும். இந்துக்களின் ஆதரவு அதிகரிக்கும்போது, பாஜக தமிழகத்தில் பெரும்பான்மையாக வெற்றி பெறும்” என கூறப்படுகிறது.
ஒருவருடைய கருத்தில், “தில்லி மக்கள் கடந்த பத்தாண்டுகளாக செய்த தவறுக்கு பிராயச்சித்தம் செய்துவிட்டனர். ஆம் ஆத்மி கட்சி அரசியல் விளையாட்டை உணர்ந்து, தங்கள் வழிமுறைகளை திருத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.இந்த முடிவுகள் டில்லி மட்டுமல்லாமல் தேசிய அரசியலுக்கும் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தலாம். எதிர்கட்சிகள், தேர்தலுக்கு பிந்தைய இந்த நிலைமைக்கு எதிராக தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
மக்களிடையே தற்போது மிகுந்த எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. பாஜக ஆதரவாளர்கள், இது மாற்றத்திற்கான நேரம் என்று கொண்டாட, ஆம் ஆத்மி ஆதரவாளர்கள் தேர்தல் முடிவுகளை மறுக்கின்றனர்.இந்த கருத்துக்கணிப்பு இந்திய அரசியலில் புதிய மாற்றங்களை உருவாக்குமா என்பது எதிர்வரும் நாட்களில் தெரியவரும்.