திருப்பதி: ஜம்மு காஷ்மீரின் முக்கிய சுற்றுலா தலமான பஹல்காமில் உள்ள ரிசார்ட் பகுதிக்கு அருகே சுற்றுலா பயணிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உட்பட 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்நிலையில், பஹல்காம் பகுதியில் மேலும் 4 முதல் 6 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர்கள் மலைப்பகுதியில் பதுங்கியிருக்க வாய்ப்புள்ளதால் ஹெலிகாப்டர்கள் மூலம் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து திருப்பதி மலைப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. திருப்பதி மலை இணைப்பு சாலை அருகே வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
பக்தர்களின் அனைத்து வாகனங்கள் மற்றும் உடமைகள் சோதனை செய்யப்பட்டு வருகிறது. திருப்பதி மலையில் பக்தர்கள் கூடும் முக்கிய இடங்கள் மற்றும் சந்திப்புகளில் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் கோவில் நிர்வாக அதிகாரிகளின் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.