
புதுடெல்லி: விடுதலைப் புலிகள் மீதான தடையை டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பாயம் உறுதி செய்துள்ளது. 1991-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதில் இருந்து விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.
மீதான தடை ஒவ்வொரு முறையும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மே 14-ம் தேதி உத்தரவிட்டது. இதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில், ‘விடுதலைப் புலிகள் மீதான ஐந்தாண்டு தடை நீட்டிப்பை தீர்ப்பாயம் உறுதி செய்தது. விடுதலைப் புலிகள் இயக்கம் இன்று வரை இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தலாக உள்ளது, எனவே, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி மன்மீத் பிரீதம் சிங் அரோரா அடங்கிய தீர்ப்பாயம், புலிகள் மீதான தடையை மேலும் நீட்டிக்கும் மத்திய அரசின் முடிவை உறுதி செய்துள்ளது.