புதுச்சேரி: கடற்கரையில் பலத்த காற்று வீசுவதால் அலைகளும் அதிகரித்துள்ளது. புத்தாண்டை கொண்டாட இன்று நள்ளிரவில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் புதுச்சேரி கடற்கரை சாலையில் குவிவார்கள். புத்தாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறையையொட்டி சுற்றுலா நகரமான புதுச்சேரியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
கடற்கரையில் நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகள் கடலுக்குள் சென்று குளிப்பதை தடுக்க கடற்கரை ஓரங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி கடற்கரை சாலையில் இருந்து பாண்டி மெரினா வரை தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகளை கடலுக்குள் கூட செல்ல வேண்டாம் என போலீசார் எச்சரித்து, அவர்களை உள்ளே செல்ல விடாமல் தடுத்து வருகின்றனர்.
புதுச்சேரி கடல் இன்று வழக்கத்தை விட சீற்றத்துடன் காணப்பட்டது. கடற்கரையில் பலத்த காற்று வீசுவதால் அலைகள் சீற்றமாக உள்ளன. புதுச்சேரி கடலோர காவல்படை போலீசார் படகில் கடலுக்குள் சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். உப்பளம் துறைமுகத்தில் இருந்து டிஜிபி ஷாலினி சிங், ஐஜி அஜித்குமார் சிங்காலா, டிஐஜி சதீசந்திரம், எஸ்எஸ்பி கலைவாணன் ஆகியோர் கடலோர காவல்படையின் 2 படகுகளில் கடலுக்குள் சென்றனர். கடற்கரையோரம் நீண்ட தூரம் சென்று பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனர்.
ஹோட்டல்கள் நிரம்பியுள்ளன – நகரம் முழுவதும் போக்குவரத்து நெரிசல் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளால், ஹோட்டல் அறைகள் நிரம்பியுள்ளன. நகர் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பல சிக்னல்களை கடக்க மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஓட்டல்கள், உணவகங்களில் கூட்டம் அலைமோதுகிறது. அவர்கள் உணவு உண்பதற்கு காத்திருக்க வேண்டும்.
தெருவோர உணவகங்களில் சாப்பிடுவதற்காக ஏராளமானோர் காத்திருப்பதையும் காணலாம். இதேபோல், நகரின் ஒயிட் டவுன் பகுதியில் கடற்கரைக்கு செல்லும் சாலைகளில் வாகனங்கள் செல்லாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. புத்தாண்டை முன்னிட்டு நட்சத்திர ஓட்டல்கள், பார்கள், கடற்கரை பகுதிகள் என பல பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரியில் மதுபான பார்கள் வரும் 31-ம் தேதி அதிகாலை 1 மணி வரை செயல்பட கலால் துறை அனுமதி வழங்கியுள்ளது. நள்ளிரவு 1 மணி வரை நேரம் நீட்டிக்கப்படுவது இதுவே முதல் முறை. புதிய மதுபானங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளனர்.