கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருவில் மெட்ரோ ரயில் சேவைகள் விரைவாக விரைவான மற்றும் சொகுசு போக்குவரத்துக்காக இயக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய ரயில்கள் பர்பிள், கிரீன், எல்லோ லைன்களில் செயல்படுகின்றன. இதனுடன் பிங்க் லைன் மற்றும் ப்ளூ லைன் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.

பிங்க் லைன் 7.5 கிலோமீட்டர் தூரத்தில் கலெனா அக்ரஹாரா முதல் தாவரகெரா வரை அமைந்துள்ளது. ஆரம்பத்தில் 2025 இறுதிக்குள் திறப்பு விழா நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மார்ச் 2026க்கு தாமதம் ஆனது. பின்பு மே 2026ல் பணிகள் முடிந்து மெட்ரோ ரயில் சேவை பயன்பாட்டிற்கு வருமென அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாமதத்திற்கு முக்கிய காரணங்கள் சுரங்கப் பாதை பணிகளில் கடினமான கிரானைட் பாறைகள், வளைவுகளில் சிரமம் மற்றும் டெண்டர் சிக்கல்கள் ஆகும். சுமார் 2.2 கிலோமீட்டர் சுரங்கப் பணிகள் இன்னும் முழுமையாக முடியாததால் திறப்பு விழா தள்ளிவைக்கப்பட்டது.
பிங்க் லைனில் மொத்தம் 18 ரயில் நிலையங்கள் வரவுள்ளன. முக்கியமானவை கலெனா அக்ரஹாரா, ஹுலிமாவு, ஐஐஎம்பி, ஜெயப்பிரகாஷ் நகர் 4வது பேஸ், ஜெயதேவா ஹாஸ்பிடல் மற்றும் தாவரகெரே ஆகியவையாகும். மற்ற நிலையங்கள் சுரங்கப் பாதையில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த லைன்கள் மற்ற மெட்ரோ வழித்தடங்களுடன் இணைப்பு வசதியையும் வழங்கும், பயணிகள் இடையே மாற்றம் எளிதாக செய்ய முடியும்.