பெங்களூரு: மைசூரில் நகர்ப்புற வளர்ச்சி ஆணையம் சார்பில் ரூ.4,000 கோடி ஊழல் நடந்துள்ளதாக புகார் எழுந்தது. சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெங்களூரு மக்கள் பிரதிநிதி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்த ரிட் மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த மைசூரு லோக்ஆயுக்தா போலீசாருக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது, சமூக ஆர்வலர்கள் மற்றும் பலர் முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்ய லோக் ஆயுக்தாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று புகார் அளித்தனர்.
மேலும், சித்தராமையா மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி 6 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.