நெல்லை: நெல்லை- சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இதுவரை 8 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வருகிறது. ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற பயணிகளின் கோரிக்கையின் அடிப்படையில், தெற்கு ரயில்வே நாளை, 15-ம் தேதி முதல் ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உள்ளது. நெல்லை – சென்னை (எண். 20666) மற்றும் சென்னை – நெல்லை (எண். 20665) ஆகிய இரண்டு வழித்தடங்களிலும் 11-ம் தேதி முதல் கூடுதலாக 8 பெட்டிகள் சேர்க்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, பொங்கல் பண்டிகைக்காக சென்னை திரும்பியவர்கள் வந்தே பாரத் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில், நிர்வாக காரணங்களால் இந்த முடிவு கைவிடப்பட்டது. இந்த சூழ்நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை, நெல்லை வந்தே பாரத் எக்ஸ்பிரஸுக்கு விடுமுறை. நாளை புதன்கிழமை, 15-ம் தேதி, கூடுதலாக 8 பெட்டிகள் சேர்க்கப்பட்டு, வந்தே பாரத் புதிய தோற்றத்துடன் இயக்கப்படும்.
தென் மாவட்ட பயணிகளுக்கு பொங்கல் பரிசாக 16 பெட்டிகளுடன் வந்தே பாரத் இயக்கப்படுவதால், அதற்கான முன்பதிவுகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. குறிப்பாக, 17-ம் தேதி காலை சென்னைக்குச் செல்பவர்களும், 19-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னைக்குச் செல்பவர்களும் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.
பொங்கலுக்குப் பிறகு சென்னைக்குச் செல்பவர்கள், கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தாலும், ரயிலில் சென்னைக்குச் செல்லும் நோக்கத்துடன் வந்தே பாரத் எக்ஸ்பிரஸுக்கு முன்பதிவு செய்து வருகின்றனர்.