லக்னோ: உத்தர பிரதேசம் மில்கிபூர் சட்டசபை தொகுதியில் பாஜக வேட்பாளர் சந்திரபானு பஸ்வான் 17,123 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளார். சமாஜ்வாதி கட்சியின் அஜித் பிரசாத் 7,000 ஓட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

பிப். 5ல் நடைபெற்ற தேர்தலில் 64.02% ஓட்டுகள் பதிவானது. மொத்தம் 30 சுற்றுகளாக எண்ணிக்கை நடைபெறுகிறது. மூன்றாவது சுற்று முடிவில், பாஜக வேட்பாளர் 10,123 ஓட்டுகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.
மில்கிபூர் தொகுதி, அயோத்தி பார்லிமென்ட் தொகுதிக்குள் அடங்கும். கடந்த தேர்தலில் சமாஜ்வாதியின் அவதேஷ் பிரசாத் வெற்றி பெற்றார். அவர் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டதால், இந்த இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பாஜக வேட்பாளர் பெரிய ஓட்டு வித்தியாசத்துடன் முன்னிலை பெற்று இருப்பது முக்கிய அரசியல் விவகாரமாக பார்க்கப்படுகிறது.