பெங்களூரு: கர்நாடக மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசுகையில், “இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுத்த காங்கிரஸ் கட்சி, நாட்டின் ஒற்றுமைக்காக பாடுபடுகிறது. ராஜ்யசபாவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எதிர்க்கட்சிகள் கடவுளின் பெயரைச் சொன்னால் சொர்க்கத்தில் இடம் பெறுவார்கள் என்று அம்பேத்கரை அவமதித்தார்.

இந்த நரகவாசிகள் சுதந்திரத்திற்கும் வளர்ச்சிக்கும் எதனையும் பங்களிக்கவில்லை. இந்தியாவை உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக மாற்ற பாடுபடுவதாக பிரதமர் கூறினார். ஆனால் இந்தியா இன்னும் 5-வது இடத்தில் இருந்து நகரவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா 4-வது பெரிய பொருளாதாரமாக இருந்தது. மோடி ஆட்சியில் சிறுபான்மையினர், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் குறிவைக்கப்படுகிறார்கள்,” என்றார்.