புதுடெல்லி: அயோத்தியில் ஜனவரி 22-ம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேகம் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆற்றிய உரையின் வீடியோ நேற்று பாஜக இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
அதில், ‘ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க அமிதாப் பச்சன், அம்பானி, அதானி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டும், ஏழை, தொழிலாளர்கள், விவசாயிகள் யாரும் பங்கேற்க அழைக்கவில்லை’ என ராகுல் காந்தி கூறியிருந்தார்.
இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் சுதன்ஷு திரிவேதி கூறுகையில், ராமர் கோயிலை காங்கிரஸ் தொடர்ந்து அவமதித்து வருகிறது.
பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஜாத் பூனவல்லா கூறுகையில், ‘ராகுல் காந்தி ஒரு பெரிய பொய்யர். அவர் பொய் சொல்வது இது முதல் முறையல்ல.