புதுடில்லி : ”டில்லி சட்டசபை தேர்தலில், பா.ஜ., வெற்றி பெறும், தாமரை மலரும்,” என, பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார். டெல்லியில் ரூ.12,200 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி இன்று (ஜன. 05) தொடங்கி வைத்தார். குறிப்பாக, மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்திற்கான புதிய அதிநவீன கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த வளர்ச்சித் திட்டங்கள் அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்தியாவுக்கு குறிப்பாக டெல்லிக்கு முக்கியமானதாக இருக்கும் என்று பிரதமர் மோடி கூறினார். இந்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும், அதற்கு நாமும் பங்காற்றுவோம் என்றார்.
மேலும், “டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று தாமரை மலரும் என நம்பிக்கை வையுங்கள்” என்றும் அவர் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். டெல்லியை வளர்ந்த இந்தியாவின் தலைநகராக மாற்ற வேண்டும் என்பது பாஜகவின் கனவு என்று கூறிய பிரதமர் மோடி, அதை நிறைவேற்ற மக்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
பின்னர் பேசிய பிரதமர் மோடி, டெல்லி மெட்ரோ ரயில் திட்டத்தை கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜ.க கட்சி தீவிரமாக ஊக்குவித்து வருகிறது. உலகின் 3வது பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா மாறும் என்றும் அவர் கூறினார். டில்லிக்கு ரூ.75,000 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து, உ.பி., இடையேயான நமோ பாரத் ரயிலை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். சாஹிபாபாத் – டெல்லி புது அசோக் நகர் மதிப்பீட்டில் ரூ. 4,600 கோடி. அவர் ரயிலில் பயணம் செய்து மாணவர்களுடன் உரையாடிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவியது.