பஞ்சாப்: எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றிய கிருஷ்ண குமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப் மாநிலம் ஹொசீர்பூரை சேர்ந்தவர் கிருஷ்ண குமார். இவர் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வருகிறார். பணியில் இருந்த கிருஷ்ண குமார் நேற்று இரவு தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
துப்பாக்கி சத்தம் கேட்டு விரைந்து வந்த சக வீரர்கள் கிருஷ்ண குமாரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கிருஷ்ண குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.