அமராவதி: விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது:- தென்னிந்தியாவில் உள்ள 4 தலைநகரங்களை – ஹைதராபாத், அமராவதி, சென்னை மற்றும் பெங்களூருவை இணைக்கும் புல்லட் ரயில் திட்டத்திற்கான கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதன் மூலம் 5 கோடி மக்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஆரம்பகட்ட ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளன. முதல்வர் சந்திரபாபு நாயுடு இவ்வாறு கூறினார். அதன்படி, இந்த புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டால், சென்னையில் இருந்து பெங்களூருக்கு வெறும் 2 மணி நேரத்தில் பயணிக்க முடியும்.

அதேபோல், ஹைதராபாத்தில் இருந்து பெங்களூருக்கு வெறும் 2 மணி நேரத்தில் பயணிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, மும்பைக்கும் அகமதாபாத்துக்கும் இடையிலான புல்லட் ரயில் திட்டம் விரைவாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதை 7,000 கி.மீ தூரத்திற்கு விரிவுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
டெல்லி-வாரணாசி, மும்பை-ஹைதராபாத், சென்னை-மைசூர் உள்ளிட்ட வழித்தடங்களில் புல்லட் ரயில் திட்டங்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.