திருவனந்தபுரம்: கேரள அரசு சாலை போக்குவரத்து கழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக சம்பளம் வழங்குவதில் அதிக காலதாமதம் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதிக்கு பிறகுதான் சம்பளம் கிடைக்கும் என ஊழியர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், மாதத்தின் முதல் நாளில் சம்பளம் வழங்க வேண்டும். ஓட்டுனர்களுக்கு சிறப்பு கொடுப்பனவு உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று 24 மணி நேர வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி நேற்று மதியம் 12 மணிக்கு வேலை நிறுத்தம் தொடங்கியது. இதனால் பல பகுதிகளில் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.