திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலில் உள்ள துவாரபாலகர் சிலையில் தங்கம் திருடப்பட்டது குறித்து கேரள உயர்நீதிமன்றம் அமைத்த எஸ்ஐடி குழு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. எஸ்ஐடியைப் பொறுத்த வரையில் இரண்டு வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன.
ஒன்று, துவாரபாலகர் சிலைகளில் உள்ள தங்கம் மாயமானது. மற்றொன்று, கோவில் வாசலில் உள்ள ஷட்டரில் இருந்து தங்கம் காணாமல் போனது தொடர்பானது. இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் உன்னிகிருஷ்ணனை எஸ்ஐடி கைது செய்து பல மணி நேரம் விசாரணை நடத்தியது.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் வரை உன்னிகிருஷ்ணன் சிறப்பு விசாரணைக்காக காவலில் வைக்கப்படுவார் எனத் தெரிகிறது. சபரிமலை கண்காணிப்பில் அமைக்கப்பட்ட எஸ்.ஐ.டி., வழக்கை கைப்பற்றிய 5-வது நாளிலேயே கைது செய்யப்பட்டனர்.
2019-ம் ஆண்டு உன்னிகிருஷ்ணனிடம் தங்கத் தகடுகளை ஒப்படைத்தபோது அவற்றின் எடை சுமார் நான்கு கிலோவாகக் குறைந்திருந்ததாக விசாரணையின் போது உயர்நீதிமன்ற அமர்வு சுட்டிக்காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.